search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செபஸ்டியன் தேவாலயம்"

    குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் வீரரான தசுன் ஷனகா கவலையுடன் தெரிவித்துள்ளார். #SrilankaBlasts #EasterBlasts
    இலங்கையில் ஈஸ்டர் அன்று தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. இந்த தேவாலயம் அருகில்தான் இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகா வீடு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இவரும் பிராத்தனைக்கு சென்றிருப்பார். ஆனால், சனிக்கிழமை முழுவதும் வெளியே சென்றிருந்ததால் அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு பிரார்த்தனைக்கு செல்லவில்லை.

    அதனால் உயிரோடு உள்ளேன் என ஷனகா தெரிவித்துள்ளார். கொடூர சம்பவம் குறித்து ஷனாகா கூறுகையில் ‘‘வழக்கமாக நான் சர்ச்சுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், நான் முந்தைய நாள் வெளியில் சென்றிருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். அதனால் செல்லவில்லை.

    ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் வீட்டில் இருந்தபோது, வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து மக்கள் தேவாலயத்தில் குண்டு வெடித்ததாக கூறினார்கள். நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். அப்போது கண்ணால் கண்ட சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.



    தேவாலயம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. உயிரிழந்தவர்களை மக்கள் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள். அந்த சம்பவத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், தேவாயலத்திற்குள் இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், குண்டு வெடிப்பு விபத்தால் சிதறிய சிறு துகளால் அருகில் உள்ளவர்கள் கூட காயம் அடைந்துள்ளனர்.

    எனது அம்மாவும், பாட்டியும் தேவாலயம் சென்றிருந்தார்கள். ஆனால் இருவரும் உயிர் பிழைத்துவிட்டனர். ஆனால், எனது பாட்டியின் தலையில் கல் ஒன்ற பலமாக தாக்கியதால் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இனவாத பிரச்சனை ஏதும் கிடையாது. ஆனால் இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்து யோசிக்க வைத்துள்ளது. தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது’’ என்றார்.
    ×